சிரியாவில் நடைபெற்றுவரும் மோதல், ஆப்கானிய அரசின் தலிபான் அமைப்புடனான சமாதானப் பேச்சுவார்த்தை போன்ற முக்கிய நிகழ்ச்சி நிரல்களுடன் அரப் லீக் உச்சிமாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (26.03.2013) கத்தாரின் தலை நகரில் ஆரம்பமாகின்றது.அரப் லீக் அமைப்பு 2 நாட்கள் உச்சிமாநாட்டை கட்டாரில் நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பூர்திசெய்துள்ளது. மாநாட்டில் முதல் தடவையாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் எதிரணி பங்குபற்றவுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்.
இரு நாட்களுக்கு முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்த சிரிய தேசிய கூட்டணியின் தலைவர் மொஅஸ் அல் காதிப் அரப்லீக் மாநாட்டில் கலந்தகொள்வதற்காக நேற்று கட்டாரை வந்தடைந்தார். அவர் சிரிய தேசிய கூட்டணியை பிரதிநிதியாக உச்சிமாநாட்டில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் நிலவும் அதேவேளை முன்னதாக அவருடை இராஜிநாமாவை சிரிய எதிர்க்கட்சி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மொஅஸ் அல் காதிப் தான் அரப்லீக் மாநாட்டில் உரையாற்றவிருப்பதை உறுதிசெய்தார் ஆனால் அது எப்போது என அவர் தெரிவிக்கவில்லை.
அவர் தனது டுவிட்டர் செய்தியில் ”கட்டாரில் நடைபெறும் அரப்லீக் மாநாட்டில் நான் சிரிய மக்கள் சார்பாக உரையாற்றவுள்ளேன், இந்த விடயத்திற்கும் என்னுடைய இராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இராஜினாமா தொடர்பில் பின்னர் கலந்துரையாடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.அரப் லீக் அமைப்பு 22 உறுப்புரிமை அறபு நாடுகளைக் கொண்டுள்ளது. 70000 இற்கும் அதிகமான சிரிய மக்களை கொன்று குவித்து சிரியாவில் இரத்தக்களரியை பஷர் அல் அஸாத்தின் இராணுவம் ஏற்படுத்தியதனால் அவர்களின் உறுப்புரிமையை அந்த அமைப்பு இடைநிறுத்தியுள்ளது.
மேலும்,
0 comments :
Post a Comment