ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி தாவிய ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதருக்கு எதிராக நாளை ஒழுக்காற்று விசாரணை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையில் ஆளும் கட்சிக்கு சார்பாக பிரதி அமைச்சர் அப்துல் காதர் வாக்களித்திருந்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் தேர்தலில் வெற்றியீட்டி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது.இந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு அப்துல் காதர் நீதிமன்றில் கோரியிருந்தார்.
அப்துல் காதரின் மனுவில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.எனினும் பிரதி அமைச்சர் அப்துல் காதரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
0 comments :
Post a Comment