TM: பதினாறு இலங்கை சுற்றுல்லா பயணிகள் பயணம் செய்த பஸ் எரிந்து சாம்பலாகியபோதும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டனர்.
ஒரேயொரு சுற்றுல்லா பயணிக்கு மட்டும் தலையில் எரி காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுல்லா பயணிகள் மதியவேளை உலகின் அதி உயரமான கெஸாரிய புத்த ஸ்தூபியில் ஏறிக்கொண்டிருந்தபோது வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டுள்ளது.
சுற்றுல்லா பயணிகளின் சூட்கேசுகள், கடவுச்சீட்டு உட்பட சகல தனிப்பட்ட உடமைகளும் கருகி போயியுள்ளன. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும் அண்ணளவாக 1 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தூபி அமைந்துள்ள இடம் பாட்னாவிற்கு வட கிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. உள்ளூர் சுற்றுல்லா விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களை அடுத்த சுற்றுல்லா தளமான வாரணாசிக்கு அழைத்து செல்லப்படும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
0 comments :
Post a Comment