(எம்.ஐ.றியாஸ்)
தயட்டகிருல தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கணனி ஆய்வு கூடத்தினை இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ,அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமு்,திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன,பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இணைப்பாளர்கள்,திணைக்களத்தலை வர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி கணனி ஆய்வு கூடத்திற்கான பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் திருக்கோவில் சிறி சித்திரவேலாயுத ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டிலுமு் கலந்து கொண்டார். பி.எச்.பியசேன எம்.பி.மற்றும் கோவில் நிருவாகத்தினரின் கோரிக்கைக்கமைவாக இக் கோவில் அபிவிருத்தி செய்யும்விடயத்தில் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
0 comments :
Post a Comment