அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிரானது எனவும் ஜெனீவாவிற்கான இலங்கையின் விசேட பிரதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கான பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த சமரசிங்க,
அமெரிக்காவின் தீர்மானம் முற்று முழுதாக நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடியதாக அமைந்துள்ளமையின் காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த பிரேரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ள நவனீதம்பிள்ளையின் அறிக்கை உள்நோக்கம் கொண்டது.
நவனீதம்பிள்ளை ஆதாரம் அற்று இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவனீதம்பிள்ளை தனது வரம்பு மீறி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி இலங்கை விவகாரத்தில் செயற்பட்டிருக்கிறார்.
இலங்கையில் 30 ஆண்டுகாலமாக இடம்பெற்ற போர் முடிவுற்று 4 வருடத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் நாடு பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கை சிறப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்தும் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை விதிக்குமாறு கூறுவது மற்றும் ஒரு நாட்டில் ஐநா பிரதிநிதிகள் வந்து விசாரணைகளை மேற்கொள்வது தவறான உதாரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

0 comments :
Post a Comment