கடந்தாண்டு பொதுபலசேனா இப்பிரச்சினையை முன்வைத்திருந்த போது எமக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது முஸ்லிம் அமைப்பு தவ்ஹீத் ஜமாத் ஆகும். கடந்த காலங்களில் இவ்வமைப்பு பொதுபல சேனாவுக்கு எதிரான பல கருத்துகளை முன்வைத்து வந்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தர் பிறந்த புனித தேசத்தில் பௌத்த பிக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் எம்மை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா கடும் கண்டனத்தை முன்வைப்பதுடன் இதன் பின்னணியிலுள்ள சில அரசியல் மத சக்திகள் தொடர்பில் இலங்கையின் பௌத்த சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும்.
அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம் தீவிர மதவாதப் போக்கிற்கு எதிராக செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பு பிரிவினை வாதத்தை விளைவிக்கும் ஹலால் சான்றிதழ் முறையை நீக்கியிருந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment