மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்க தீர்மாணித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் றம்ழான்.


பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்பு தெரிவித்து எதிர் வரும் 7ம் திகதி நடைபெறும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்க தீர்மாணித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்  றம்ழான் தெரிவித்தார் 
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதும் புனித இஸ்லாத்தின் மீதும் பாரியளவிலான வன்முறைகளும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 

இதனால் இலங்கையில் நலாபுரங்களிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருவதுடன் தங்களது மார்க்க அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். 

நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்சி நிரலின் கீழ் பௌத்த இனவாதிகளின் செயற்பாடு சுதந்திரமாக அரச பாதுகாப்புடன் நடந்தேறுகின்றது முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ வன்முறைகள் நடந்தேறியிருக்கின்றது அது விடயமாக இன்று வரைக்கும் ஒருவரேனும் கைது செய்யப்பட்டதாகவோ அல்லது அதற்காக நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்தாகவோ கிடையாது இந்த நாட்டில் காவிவுடையுடன்  மேற்கொள்ளப்படும் எந்த விதமான அநிதிகளுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் சட்ட நடவடிக்கை கிடையாது என்பதை கடந்த கால நிகழ் கால சம்பவங்கள் சான்றாகும்.

மீக நீண்ட காலம் பழமை வாய்ந்த அனுராதபுர ஸியாரமும் தம்புள்ள பள்ளிவாயலும் பட்டப்பகலில் பல பேர் மத்தியில் உடைக்கப்பட்ட போது அதன் சூத்திரதாரிகளை அன்று கைது செய்யாது அரச பாதுகாப்பு படைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே  இன்று நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையும் போராட்டத்தினையும் தோற்று வித்துள்ளது என்பதை மனச்சாட்சியுடன் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அன்று ஸியாரம் உடைப்பில் ஆரம்பித்து இன்று மாடு அறுக்கும் மடுவம் வரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது நாளை எதுவரைக்கும் என்பது எவருக்கும் தெரியாத கேள்விக்குறியோடு இவ்வாறு தினம் தினம் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் பௌத்த இனவாதின் உச்சக்கட்ட கொடுமைக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றார்கள் இதனை தடுத்து நிறுத்தி முஸ்லிம்கள் அச்சமின்றி தங்களது அன்றாடக் கடமைகளையும் மார்க்க அனுஸ்டானங்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க பாதுகாப்பு தரப்பினர் தவறி விட்டனர்.


பாதுகாப்பு தரப்பு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க ஆர்வம் காட்டாதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்க வேணடும் ஒன்று பாதுகாப்புத்தரப்பில் பெரும்பான்மை சமூகத்தவர்களா பௌத்தர்கள் இருப்தால் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தரப்பின் கண்டிப்பான உத்தரவாக இருக்க வேண்டும் எது எப்படியிருப்பினும் ஒரு தனிமனிதனுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது சட்டநடவடிக்கை எடுக்கும் பாதுகாப்புத்தரப்பு ஒரு சமூகத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது ஒரு பாரபட்சமான நடவடிக்கையாகும்.
   
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது மத அனுஸ்டானங்களையும் அன்றாடத் தேவைகளையும் சுதந்திரமாக மேற்கொள்ள வழி வகுக்க வேண்டிய பொறப்பு பாதுகாப்பு தரப்பினரதாகும் ஆனால் இன்று ஒரு இனத்திற்கு எதிராக பேரின வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளையும் அடக்குமறைகளையும் வேடிக்கை பார்க்கின்ற நிலையில் பாதுகாப்பு தரப்பு இருப்பது வேதனைக்குறியது கட்டுக்கடங்காமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்தும் இனவாதிகளை பொதுச் சமாதானத்திற்கு பங்கம் விளைவித்தல் என்ற பொலிஸ் சட்டத்திற்கு அமைவாக கைது செய்து நீதிமன்றத்திற்கு முன் ஏன் நிறுத்த முடியாது .

அத்தோடு பள்ளிவாயல்களை உடைப்பதை நேரிலும் வீடியோ காட்சிகளினுடாகவும் பார்த்த போதிலும் பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை ஆனால் எந்தப்பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என்றும் அவ்வாறு உடைக்கப்பட்டதற்கு இன்றுவரைக்கும் பொலிஸில் ஒரு முறைப்பாடுகளும் கிடையாது என அரசாங்கம் கூறுவது முழு புசனிக்கயை சோற்றில் மறைக்கின்ற விடயமாகும்.

இவ்வாறு அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநீதிகளையும் அடக்குமுறைகளையும் தடுக்க தவறி விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெறும் மாதாந்த சபை அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்கவுள்ளதாகவும் இதைப்போன்று ஏனைய சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கௌரவ உறுப்பினர்கள் மேற்படி அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு படடியனிந்து கலந்து கொள்வதோடு பாராளமன்றத்தில் அங்கம் வகிக்கும் கௌரவ அமைச்சர்களும், பாராளமன்ற உறுப்பினர்களும் அமர்வின் போது கறுப்பு படடியனிந்து தங்களது எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :