குருநாகல் நகரில் அல்லது குருநாகல் தேர்தல் தொகுதியில் அண்மித்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் அல்லது வேறு எந்த சமூகமாக இருந்தாலும் சரி இந்தப் பிரதேசங்களில் வாழ்வதற்கும் தங்களுடைய வியாபாரங்களைத் தங்கு தடையின்றி செய்வதற்கும் எக்காரணம் கொண்டு அச்சப்படத் தேவையில்லை. இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு நானே பொறுப்பு. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்குமாயின் வீதியில் இறங்கி அவர்களுக்குரிய பாதுகாலவனாக நானே முதல் இருப்பேன் என்று தாவரவியல் பூங்கா பொழுது போக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தற்போழுது எதிர்நோக்கும் பிரச்சினை சம்மந்தமான கூட்டம் குருநாகல் மல்லவப்பிட்டியவையில் நடைபெற்றது குருநாகல் நகரிலுள்ள முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் : தற்போது நாட்டின் பல பாகங்களிலும் நகரங்களிலும் சமூகங்களுக்கிடையே ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் வகையில் சில பிரச்சார நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம். 30 வருட யுத்தத்திற்குப் பின்பு நாடு சுமூக நிலைக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இன்று சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களின் ஆதரவு பெருகிக் கொண்டு வரும் இக்காலகட்டத்தில் இவைகளை சீர்குழைப்பதற்காகவே இந்தப் பேயாட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி எல்லா சமூகத்திற்கும் உரிய பொதுவான ஜனாதிபதி ஆவார். இப்படியான குழப்பங்களை ஏற்படுத்தி இனத்துவேசங்கள் மூலம் அல்லது குலபேதப் பிரச்சினைகள் மூலம் தங்கள் அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்கு விசப் பரீட்சைநடந்து கொண்டிருக்கிறது.
ஏதாவது பிரச்சினை குருநாகல் நகரில் அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் நடைபெறுமாயின் சில நிமிடங்களுக்குள் 1000 படை வீரர்களை நகருக்குள் கொண்டு வரக் கூடிய பாதுகாப்பு பலம் இன்று அரசாங்கத்திடம் உள்ளது.
குருநாகல் நகரில் இன்று அதிரப்படை ,மூன்று இராணுவ முகாம்கள், பல பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. யாராவது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் போது அதனை விரைவாக தடுக்கக் கூடிய பலம் எம்மிடத்தில் உள்ளன. நீங்கள் எக்காரணம் கொண்டு அஞ்சிவாழத் தேவையில்லை. எவரேனும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிபாராயின் அதற்கு நான் இடமளிக்க விடமாட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் பியூமால் பெரேரா, குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.S.C
- இக்பால் அலி
0 comments :
Post a Comment