இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆரம்பமாகும் இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
இளைஞர் சேவைகள் சம்மேளன பிரதேச மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் இளைஞர், யுவதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு என தமது விண்ணப்பங்களை நாடு முழுவதிலும் உள்ள 335 பிரதேச செயலகங்களிலுள்ள இளைஞர் சேவைகள் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
முதலாவது இளைஞர் பாராளுமன்ற அமர்வு கடந்த மாதம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு மே மாதம் 23ம் திகதி இடம்பெறும் என மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த பெப்ரவரி 28ம் திகதி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும்; அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment