கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை பயிற்சிக்கு அனுப்புவதில் பாரபட்சம்.

( கல்முனை நிருபர்)

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும், திணைக்களங்களிதும் நேர்முகப்பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன,மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக்கூறிவருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் காட்டப்படும் பாரபட்சமானது மனவேதனையளிப்பதாகவும் சுட்டிக்காட்டுவதுடன், இந்நிலை தொடரமாக இருந்தால் பாதிக்கப்படும் பட்டதாரி பயிலுனர்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :