(எஸ்.அஷ்ரப்கான்)
இங்கு கருத்துத்தெரிவித்த ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் தம்பர அமில தேரர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் ஆகியோரின் உரைகள் உண்மையானதாகவும், வெளிப்படையானதாகவும், வஞ்சிக்கப்பட்டுப்போயிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு பெரிதும் ஆறுதலளிக்கும் வார்த்தைகளாகவும் இருந்தன. என்று முஸ்லிம் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீட் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
பத்தேகம சமித்த தேரர் பிக்குவாகவும் மக்களின் வாக்குகள் பெற்ற அரசியல்வாதியாகவும் இருக்கின்றார். இந்த நிலையில் தாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினால் சிங்கள மக்களின் வாக்குகள் தமக்கு குறையலாம் என்றே சராசரி அரசியல்வாதி நினைப்பான்.
ஆனாலும் உண்மையை பேச வேண்டும் என்ற அவரது துணிச்சல் முஸ்லிம் சுயநல, ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு பாடமாகவும், துறவறத்தை கற்றுத்தந்த பௌத்த சமயத்தின் தேரர்கள் உண்மை பேசும் அரசியல்வாதிகளாக இருக்கும் போது உலகுக்கு ஜனநாயக அரசியலை கற்றுத் தந்த இஸ்லாத்தின் தலைவர்களான உலமாக்கள் தாம் அரசியலுக்குள் வராமல் பொய்யான ஏமாற்று அரசியல்வாதிகள் பின்னால் அலையும் நிலையையும் பார்த்து வெட்கப்படக்கூடியதாக இருந்தது.
அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனமாக ஒளித்துக்கொண்டிருக்கும் போது இந்த இரண்டு தேரர்களும் இவ்வாறு துணிச்சலாக பேசுவதனை கலந்து கொண்ட முஸ்லிம்கள் நன்றியுடன் பார்த்தனர். இந்த தேரர்களே இவ்வாறு பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்தை ஆதரித்து பேசும் போது முஸ்லிம் எம்பீக்கள் ஏன் பாராளுமன்றத்தில் மௌனமாக இருந்து சமூகத்தை காட்டிக்கொடுக்கிறார்கள என பலரும் பேசிக்கொண்டதையும் காணக்கிடைத்தது.
இதனை ஏற்பாடு செய்த அஸாத் சாலி பாராட்டுக்குரியவர். ஆனாலும் அரச தரப்பையும், எதிர் தரப்பையும் அரசு கள்ளத்தனமாக ஆதரவு கொடுக்கும் பொது பல சேனாவுக்கெதிரான இக்கருத்தரங்கிற்கு ஒரு சேர அழைத்திருந்த காரணத்தால் இரு தரப்பாரும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளாமை என்பது இரு தரப்பாரையும் அணைத்துக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்ய முனைவது பிழை என்பதை காட்டியது என்றுமுள்ளது
0 comments :
Post a Comment