அட்டாளைச்சேனை டி.பி. ஜாயா வித்தியாலயத்தில் அதிபரின் பணி ஓய்வு பெறும் நிகழ்வு.படங்கள்.


(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை டி.பி. ஜாயா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி தனது 42 வருடகால ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.அப்துல் ஜப்பாரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் டி.பி. ஜாயா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

பெற்றோர்கள் சார்பில் எம்.ஏ. பௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கறைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.எல்.அப்துல் மஜீத், ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளாகளான யூ.எம்.வாஹித், கே.எல்.ரஸாக், கோட்டக்கல்வி அதிகாரி கஸ்ஸாலி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் ஜப்பாரின் சேவைகளைப் பாராட்டி அட்டாளைச்சேனை 3ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

அக்கறைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.காசீம் வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவித்தார். பெற்றார் மற்றும் ஆசிரியர்களினால் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது. அதிபர் ஜப்பாரின் அளப்பரிய சேவைகளை பாராட்டி அதிதிகள் உரையாற்றினர். மேலதிகாரிகளின் அன்பைப் பெற்று சிறந்த நிர்வாகத்தினை மேற்கொண்டவர் ஜப்பார் ஆசிரியர் என்று அவருக்கு புகழ் மாலை சூட்டினர். இங்கு ஆசிரியர்கள் சார்பில் பி.டி.இக்பால் ஆசிரியர் சிறந்த உரையொன்றை நிகழ்த்தினார்.

அட்டாளைச்சேனையின் கல்வித் துறைக்கு அதிபர் ஜப்பார் அவர்கள் பெரும் பங்களிப்பினை ஆற்றியுள்ளார் என்பது காலத்தால் மறக்க முடியாத ஒன்றாகும்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :