மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரரான விராது என்பவர், கடந்த ஞாயிறன்று மத சுதந்திரத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக ரோஹிங்ய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேரினவாதம் கருத்துக்களை வெளியிட்டு வந்த இவர் முஸ்லிம்கள் மீது கடும் விரோத போக்கு உடையவராக இனங்காணப்பட்டிருந்தார். அத்துடன் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு பிரச்சாரங்களை தலைமை தாங்கி வழி நடத்தியிருந்தமை மற்றும் இன மோதல்களை தூண்டி விட்டதன் பேரில் 2003 ஆம் ஆண்டு மியன்மார் அரசு இவரை சிறை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியத்தில் அமைந்திருக்கும் பௌத்த பிக்குகளின் மடத்தின் தலைமை பிக்குவான சாசனா ராம்சியே இவருக்கான இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
ரோஹிங்ய முஸ்லிம்களை 'கலர்' என பெயரிட்டு (அவர்களை இழிவு படுத்துவதற்காக பயன் படுத்தும் சொல்) அவர்களை விரட்டியடிப்பதற்கான அழைப்பை விடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த குறித்த பெளத்த தேரரான இவர் பொய்யான தகவல்களை பரப்பி 330க்கும் மேற்பட்ட கடும்போக்காளர்களை தூண்டி கடந்த வாரம் ரங்கூன் நகரில் ஒரு மத்ரசா மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல கடைகளை தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் பௌத்த பிக்குகள் மடத்தின் தலைமை பிக்குவான சாசனா ராம்சி இவரின் போக்கை நியாயப்படுத்தி ஆசி வழங்கியுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment