பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட அம்பாரை மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி அமைப்புக்களுக்கு அமைப்பின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வேளான்மை அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அம்பாரை ஹாடி தயட்ட கிருள வளாகத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட மீள் எழுச்சித்திட்ட பிரதித்திட்டப் பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இயந்திரங்களை அமைப்பின் தலைவர்களிடம் வழங்கி வைத்தார்.
இதன்போது அமைச்சர்களான பீ. தயாரத்ன, ரஞ்சித் சியம்லாப்பிட்டிய, பாரளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் மீள் எழுச்சித்திட்ட அதிகாரிகள், சமூக வளவாளர்கள், கிராம அபிவிருத்தி அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment