வெனிசூலா நாட்டு மக்களுக்கு சாய்ந்தமருது பிரதேச வொலிவேரியன் கிராம மக்கள் அநுதாபச்செய்தி- ஹரீஸ் MP

(கல்முனை நிருபர்)


பல்வேறு வழிகளிலும் மக்களால் கவரப்பட்ட சிறந்த தலைவரான வெனிசூலா நாட்டு ஜனாதிபதி யூ கோசாவோஸின்    இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்ற வெனிசூலா நாட்டு மக்களுக்கு இந்த வேளையில் எமது சாய்ந்தமருது பிரதேச வொலிவேரியன் கிராம மக்கள் மற்றும் இலங்கைத்திருநாட்டு மக்கள் சார்பாக  ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
வெனிசூலா நாட்டின் ஜனாதிபதி   நீகோ மாவோயிஸின்    மறைவையொட்டி சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் (13) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றும்போது,
வெனிசூலா நாட்டின் ஜனாதிபதி அவர்கள் எங்களைவிட்டு பிரிந்திருக்கின்ற நிலையில் அவருக்கான ஒரு நினைவு நிகழ்வை நாம் ஏற்பாடு செய்து நடாத்துவது நன்றியுணர்வை காட்டுகின்றது.

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்கள் அவரை என்றும் மறக்க முடியாது. அவ்வாறான ஒரு நினைவை விட்டு நீங்காத ஒரு சேவையை அவர் எமது பிரதேசத்திற்கு செய்திருக்கின்றார். அவர் எவ்வாறு சாய்ந்தமருது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தாரோ அதேபோன்று இந்த உலகில் எமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், ஏனைய மேற்கத்தேய வல்லரசுகள் இஸ்லாத்தை ஒடுக்குவதற்காக முனைந்தபொழுது அவர் இந்த ஏகாதிபத்தியர்களுக்கு அடி பணியாமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஈரானிய மற்றும் ஏனைய இஸ்லாமிய  நாடுகளுடன் கைகோர்த்துக்கொண்டு மேற்கத்தேய சர்வாதிகாரிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்பதையும் நாங்கள் மறக்க முடியாது. அவருடைய ஆளுமை என்பது மிக இளம்  வயதில் (17 வயது) பாடசாலைக்குச் செல்லுமபோதே இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டு 21 வயதில் ஒரு இராணுவ வீரராக வெளியாகி 26 வது வயதில் “லெப்டின்ன்ட் கேணல்“ என்ற உயர் பதவிக்கு வந்து பல்லாயிரக்கணக்கான இராணுவ வீர்ர்களுக்கு தலைமைதாங்கிய ஆளுமைமிக்க படைத்தளபதியாக அவர் இருந்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது 1994ம் ஆண்டு வெனிசூலா நாட்டை அந்நாட்டு ஆட்சியாளர்கள் சூரையாடியபோது, அந்நாட்டு மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தபொழுது அந்த நாட்டின் ஏழை மக்களுக்கு விடிவு கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை துச்சமாக மதித்து, நேர்மையான இராணுவ வீரர்களை அனுப்பி ஒரு புரட்சி இயக்கத்தை நடாத்தி
அதில் தற்காலிக தோல்வியுற்றாலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் 1998 ம் ஆண்டு வெளியிறங்கி, அந்த நாட்டு மக்களின் புரட்சிக்கு மீண்டும் தலைமைதாங்கி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 1999 ம் ஆண்டு வெனிசூலா நாட்டின் ஜனாதிபதியாக மாறினார். அதன் பின்புதான் அந்நாடு ஒரு பலமான நாடு என்பதுடன் எண்ணெய் வளம்மிக்க ஒரு வல்லரசு என்பதை உலகிற்கு வெளிக்காட்டப்பட்டது.

இன்ற மத்திய கிழக்கில் எண்ணெய் வளம்மிக்க பல முஸ்லிம் நாடுகள் இருந்தாலும் முதல் 10 எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்குள் ஒன்றாக வெனிசூலா இருக்கின்றது.
இவ்வாறு தொடர்ந்தும் அந்நாட்டு வளர்ச்சிக்காகவும், உலக நாடுகளில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவும் பாடுபட்டவர் துரதிஸ்டவசமாக இம்மாதம் 5ம் திகதி எங்களைவிட்டு பிரிந்திருக்கின்றார். இது உலக நாடுகளின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :