பொது பல சேனா போன்ற எத்தனை அமைப்புக்கள் வந்தாலும் எமது இஸ்லாமிய உணர்வுகளை இல்லாதொழிக்க முடியாது-ஹரீஸ் MP




(எஸ்.அஷ்ரப்கான்)
நாங்கள் வாழும்போதும் முஸ்லிம்களாகவே வாழ்வோம், மரணிக்கும்போதும் உண்மையான முஸ்லிம்களாகவே மரணிப்போம். யாருடைய மிரட்டல்களுக்கும்  அடிபணிந்து வாழ மாட்டோம். பொது பல சேனா போன்ற எத்தனை அமைப்புக்கள் வந்தாலும் எமது இஸ்லாமிய உணர்வுகளை இல்லாதொழிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுவின்தலைவருமான எச்.எம்.எம்ஹரிஸ்  கூறினார்.
சாய்ந்தமருது இலங்கை இளைஞர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான 2வது சான்றிதழ்வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது றியாழுள் ஜன்னா வித்தியாலயத்தில்வெள்ளிக்கிழமை (22) பயிற்சி நிலையபொறுப்பதிகாரி எஸ்.எம்.லத்தீப் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றும்போது,
மாற்று மதத்தவர்கள்  கஸ்டங்களை அனுபவிக்கும்போது அதற்கு உதவாமல் இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அந்த அடிப்படையில் நாம் இந்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொறுமையுடன் அனைத்து இனத்தவர்களுடனும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எம்மை சீண்டிப்பார்க்க நினைக்கும் எவரும் தோல்வியையே சந்திக்க வேண்டி வரும். எவருக்காகவும் இஸ்லாமிய நடைமுறைகளை விட்டுவிட முடியாது.
சர்வதேச ரீதியில் இலங்கை நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தி நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முற்படுகின்ற பொதுபல சேனா சூழ்ச்சியாளர்களின் வலையில் சிக்கியுள்ளது. இதனைப்பற்றி சற்று நிதானமாக சிந்தித்து செயலாற்றுகின்ற தேவை தற்போதைய சூழ்நிலையில் எமக்கு இருக்கின்றது.
இலங்கைத்திருநாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு பாரிய பங்களிப்பை செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எமது பிரதேச இளைஞர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாட்டின் இளைஞர்களை ஒருநிலைப்படுத்தும் பொறுப்பு நாட்டின் ஜனாதிபதி முதற்கொண்டு, சகல பிரஜைகளுக்கும் உள்ளது. அந்த தொடரில்தான் கொடூர யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் தலைமை இளைஞர்கள் விடயத்திலும் கூடிய அக்கறை எடுத்து செயற்படுகின்றது. அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதியின் சிந்தனைப்பிரகாரம் இளைஞர் யுவதிகளின் பல்வேறு ஆற்றல்களையும் வெளிக்கொண்டுவந்து, அவர்களை எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் மொழியறிவு, இதர தொழில்சார் கற்கை நெறிகளையும்  இலங்கை இளைஞர் பயிற்சி நிலையத்தின் ஊடாக இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வெற்றிகரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எமது பிரதேச இளைஞர்கள் சார்பாகநன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்இன்று இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டுதமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை பார்க்கும் போது உண்மையில்பெருமிதமடைகி்ன்றேன்சிங்களம்ஆங்கிலம் ஆகிய துறைகளில் எமது மாணவர்கள் புலமை பெற்றுவருகின்றனர்இவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டுஎன்பதையும்  இதுபோன்ற முயற்சிகள்தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். பிரதேச இளைஞர், யுவதிகள் இந்த நிலையத்தினால் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். என்றும் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :