தெயட்ட கிருளயில் கரையோரப்பகுதி புறக்கணிப்பானது கவலையளிக்கிறது - உதுமாலெப்பை MPC

பி.முஹாஜிரீன்

அம்பாறை மாவட்டத்தில் தெயட்ட கிருள அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னிட்டு அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு குறைவானது மட்டுமல்ல சமகாலத்தில் அவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமையானதும் கவலையான விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தில் இப்பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்குமென்ற எதிர்பபார்ப்பில் இருப்பதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை தெரிவித்தார்.


தெயட்ட கிருள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவருத்தி வேலைத்திட்டங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (21) அம்பாறை மொண்டி ஹோட்லில் இடம்பெற்றது. 

இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது, அம்பாரை ஒரு முக்கிய நகரம் அதை கட்டாயம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் இது போன்றே இம்மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களிலுள்ள முக்கிய நகரங்களும் கிரமாமங்களையும் அபிருத்தி செய்யவேண்டிய ஒரு தார்மீகக் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆவ்வாறு நடைபெறுமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கிருக்கிறது.
அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் இது தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 682 கிலோ மீற்றர் வீதிகள் 12634 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 214 கிலோ மீற்றர் வீதிகள் 4383 மில்லியன் ரூபா செலவிலும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 257 கிலோ மீற்றர் வீதிகள் 4475 மில்லியன் ரூபா செலவிலும், திருக்கோணமலை மாவட்டத்தில் 211 கிலோ மீற்றர் வீதிகள் 3776  மில்லியன் ரூபா செலவிலும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்தில் 126 கிலோ மீற்றர் வீதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 140 கிலோ மீற்றர் வீதிகளும், திருக்கோணமலை மாவட்டத்தில் 87 கிலோ மீற்றர் வீதிகளுமாக மொத்தம் 353 கிலோ மீற்றர் வீதிகள் தெயட்ட கிருள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும், அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கியும் கடனுதவி வழங்கியுள்ளதுடன் ஜப்பான் நாட்டு ஜெய்க்கா திட்டத்தின் கீழம் பெருமளவான நிதியுதவி கிடைக்கப்பெற்று இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், ஜப்பான் நாட்ட மக்களுக்கும் மாகாண வீதி அபிவிரத்தி அமைச்சர் என்ற வகையில் நன்றி களைத் தெரிவிக்கின்றேன் எனவும் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
மிகுதியாகவுள்ள 329 கிலோ மீற்றர் வீதிகள் அடுத்த கட்டமாக அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் வி. கருணநாதன், பிரதம பொறியிலாயர் ஏ.எம். றிஸ்வி, மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்எம். ஜௌபர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :