சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்.

இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாறிக்கொள்ள 

உதவும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.

இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட 


இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர 

முடியாத பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி 

நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு எடுக்கப்படுவதாக கூறுவதை 

மறுத்துள்ள சவூதி தொலை தொடர்பு ஆணையம் சவூதியின் பாதுகாப்பு கருதியே இம்முடிவு 

எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை 


கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்க்கு எதிரான தமது போரில் 

பின்னடைவு ஏற்படும் என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை 

விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :