பொத்துவில் விவகாரம் தொடர்பில் அம்பாறை செயலகத்தில் SLMC தலைவர் தலைமையில் நடைபெற்ற விஷேட கூட்டம்- படங்கள் இணைப்பு.

எம்.எப்.றிபாஸ்

பொத்துவில் விவகாரம் தொடர்பில் அம்பாறை செயலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டம் 
பொத்துவில் விவகாரம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று அம்பாறை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது. 

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தாம் இக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததாக அம்பாறை அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் கூட்டத்தின் ஆரம்பத்தில் தெரிவித்தார். 
பொத்துவில் முஹூது மகா விகாரை அமைவிடம் தொடர்பில் நிலவிய கருத்து முரண்பாடுகளுக்கும், அபிப்பிராய பேதங்களுக்கும் இன்றைய கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டதாக தெரியவருகிறது. 

அத்துடன் பொத்துவில் மக்களின் காணி, மற்றும் எல்லைப் பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கு அமைந்துள்ள மணல் மலை கரையோரப்பாதுகாப்பு திணைக்களத்தின் விதிமுறைகளை மீறாமல் பேணிப் பாதுகாக்கப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல். அதாவுல்லா, பீ. தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி,  பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், சரத் வீரசேகர மாகாண அமைச்சர் உதுமா லெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம் பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.எம். வாசித் தலைமையில் பொத்துவில் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இக் கூட்டத்திற்கு பொத்துவில் முஹுது மகா விகாராதிபதியும் அரசாங்க அதிபரின் அழைப்பின்  பேரில் கலந்துகொண்டார்.  







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :