கட்சி தொடர்பில் செயற்படாது இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது விபரங்களை தனக்கு உடனடியாக குறுச் செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பி தெரியப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடாதுள்ள நகரசபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் தொடர்பில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் அதேவேளை ஈமெயில் மூலமாகவும் தனக்கு அறியப்படுத்துமாறு ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கல்கமுவ பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் இலக்கம் மற்றும் ஈமெயில் அனுப்பும் முகவரியும் மக்களுக்கு ரணில் தெரியப்படுத்தினார்.
0 comments :
Post a Comment