(முஹம்மட்)
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் துண்டி, மதவாத மேலாதிக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயற்படும் அமைப்பின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் ஏ.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் விடயம் சம்மந்தமாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் எமது அரசியல்வாதிகளின் தற்போதய பொறுப்பு சம்மந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தனது கருத்தினை வெளியிடும்போது,
இந்த விடயங்களை முன்கொண்டு செல்லும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் அரச பின்புலத்தில்தான் செயற்படுகின்றது என்பது தெளிவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் பௌத்த கலாச்சார நிலையம் என்ற போர்வையில் இவர்களது காரியாலயத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
அரசாங்கம் இனவாதத்தில் குளிர்காய்ந்து தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இதன் பிறகும் எமது முஸ்லிம் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்பட முன்வர முடியவில்லையா ? என்ற கேள்வியை எமது மக்கள் தொடுக்கின்றனர். யாரைத்திருப்திப்படுத்துவதற்காக இந்த பிரிவினையுடன் வாய்மூடி மௌனியாக இருக்கின்றீர்கள் என்று முஸ்லிம் தலைவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். மானமுள்ள மார்க்கப்பற்றுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இனிமேலும் வாய்மூடி அரசாங்கத்திற்கு தலைசாயக்க மாட்டான்.
வெறுமனே சுகபோக அரசியலுக்காக எமது மத விடயங்களில் கை வைக்கும் தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபடாமல் மௌனமாக இருப்பது கவலை தருகிறது.
யுத்த்த்தைத் தவிர மற்ற எல்லா விடயங்களிலும் தோல்வி கண்ட அரசாங்கம் தற்பொழுது இனவாத்த்தின் மீது ஏறித் தன்னுடைய பயணத்தை தொடர முற்படுவதை நாட்டை நேசிக்கின்ற எந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்பதை கூறிக்கொள்வதோடு, தொடர்ந்தும் இந்த அநியாயங்களை கண்டும் முஸ்லிம்கள் பொறுமையுடன் இருப்பதை யாரும் ஒற்றுமையற்ற சமூகம் என்று யோசித்துவிடக் கூடாது.
முஸ்லிம்கள் ஹலால் விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை என்பதை இலங்கை முஸலிம்களின் அதிஉயர் சக்தியான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெளிவுபடக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment