கடந்த வருடம் மாத்திரம் 1740 பலாத்கார வழக்குகள் பதிவு.


(எம்.பைஷல் இஸ்மாயில்)
டந்த 2012 ஆம் ஆண்டு 1740 பலாத்கார வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் மிகக் கூடுதலானவை 18 வயதுக்குட்பட்ட பெண்களே என்று சட்டமா அதிபர் திணைக்கள தரவுகளின் படி அறிய முடிகின்றது.

குறித்த வழக்குகளின் அடிப்படையில் 1464 வழக்குகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களாவர். இதில் அறிவிக்கப்பட்ட வல்லுறவு வழக்குகளில் 89 சதவீதம் பெண்களும், 11 சதவீதம் ஆண்களும் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
இவற்றில் ஒரேயொரு வழக்கைத் தவிர மற்றய ஏனையவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக ஆண்களும், 96 சதவீதமான வழக்குகளில் துஷ்பிரயோகம் செய்தவர் பாதிக்கப்பட்டவருக்கு அதிகம் தெரிந்தவராக காணப்படுகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உறவினர்களாகவும், கருக் குடும்ப அங்கத்தவர்களாகவும், அயல்வராகவும், காதலனாகவும், சமயத் தலைவர்களாகவும் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களாகவும் காணப்படுகின்றனர்.

பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பான 1159 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரானதும் மிகமோசமானதுமான பாலியல் துஷ்பிரயோகங்கள் என 723 முறைப்பாடுகளும் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தரவுகள் தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :