(பாலமுனை றனீஸ் ஆதம்)
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு திவிநெகும மலிவு விற்பனைச் சந்தை 2013.04.10 ம் திகதி Pஃ11 பிரிவின் வட்டிவெளி பிரதான வீதியில் உள்ள பொத்துவில் சிங்கள வித்தியாலயத்திற்கு முன்பாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் ஆரம்பமாகியது.
இதற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகளின் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் அவர்களும், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம்.அப்துல் வாசித், உதவிப் பிரதேச செயலாளர் ர்யு.மாலினி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்;, மற்றும் நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், விவசாய போதனாசிரியர் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது திவிநெகும திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் 2013.04.11 ம் தகதி வரைக்கும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment