ராஜாஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் சுபாஷ் நகரை சேர்ந்த சங்கர் லால் ஜாட் (25) என்பவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுமியை கெடுத்து இருக்கிறான்.
இதனால் கோபமடைந்த அந்த சிறுமியின் பெற்றோரும், சகோதரரும் நேற்று அந்த இளைஞனை பலமாக அடித்து இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அவனை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று இருக்கின்றனர். ஆனால், அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
0 comments :
Post a Comment