பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணியாளர்களை தொழிலில் ஈடுபடுத்தியுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்தமையே இதற்குக் காரணம் என பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள சுமார் 300 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் ஜெத்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்தை நாடியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சவுதி அரேபியால் இலங்கைப் பணியாளர்கள் சுமார் மூவாயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து அவர்கள் மீ்ண்டும் நாடு திரும்புவதற்காக தலா ஐயாயிரத்து 800 சவுதி ரியால்களை கட்டணமாக செலுத்த நேரிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment