போலி மருத்துவ சான்றில் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்றவர் 3மாத கர்ப்பிணி.


போலி மருத்துவ சான்றிதழை தயாரித்து சவூதி அரேபியாவுக்கு சென்ற தமிழ் பெண் 3 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்ததை அடுத்து  அந்நாட்டு தொழில் வழங்குனரால் மீண்டும் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தகவலை சவூதியிலிருந்து வெளியாகும் அரேப நியூஸ் வெளியிட்டுள்ளது.

மஸ்கெலியாவை சேர்ந்த சரோஜா புஸ்பவள்ளி (உண்மையான பெயர் அல்ல எனவும் கூறப்படுகிறது )
என்ற அவர் கடந்த வாரம் வீட்டுப்பணிப் பெண்ணாக சவூதிக்கு சென்றுள்ளார். 20000 ரூபா மாத வருமானத்துக்கே அவர் அங்கு தொழிலுக்கு சென்றதாக தெரிகிறது.

சவூதியில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையின் போது அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

எனினும் கொழும்பில் தயாரிக்கப்பட்ட அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கருத்தரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் அவர் வீட்டுப் பணிகளுக்கு ஏற்புடையவர் அல்ல என தெரிவித்து அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அவரது தொழில் வழங்குனர்  இலங்கை துதரகத்திடம் அவரை ஒப்படைத்துள்ளதாக அரப் நியூஸ் தெரிவிக்கிறது.

அவரை இலங்கைக்கு திருப்பு அனுப்பும் நடவடிக்கைகளை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :