ஈரானில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி காரணமாக சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 850 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் தென் கிழக்கு பகுதியில் புஷர் மாகாணத்தி அணு சக்தி தொழிற்சாலைக்கு அருகில் நேற்று இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறித்த பூமியதிர்ச்சியானது ரிச்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இருப்பினும் இந்த பூமியதிர்ச்சி காரணமாக அணு சக்தி தொழிற்சாலை எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை எனவும் இந்த தொழிற்சாலை செயற்படுவதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டுபாய், அபுதாபி, பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளிலும் இந்த பூமியதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்பு பணிகளுக்காக மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். VV
0 comments :
Post a Comment