(எம்.பைஷல் இஸ்மாயில்)
இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் கோடி செலவில் சுமார் 43 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்படி இலங்கையின் வடக்கு மாகாணங்களில் 39 ஆயிரம் வீடுகளும், கிழக்கு மாகாணங்களில் 4 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளன.
இந்த திட்டத்தினை செயல்படுத்த இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 2013, 2014 ஆம் நிதியாண்டில் சுமார் 375 கோடி இந்திய ரூபா செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இரண்டாம் கட்டமாக சுமார் 100 கோடி இந்திய ரூபா பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டும் எனவும் இரண்டாம் கட்டத்தில் பயனாளரே குறிப்பிட்ட வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொகை பயனாளரிடம் நேரடியாக வழங்கப்படும். இலங்கையில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய வங்கிகளின் வாயிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment