க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றியோரில் 64 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி


நாடளாவிய ரீதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு
க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றியோரில் 64 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு  தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.

இது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  4% அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் பரீட்சைக்கு தோற்றியோரில் 73.2 வீதமானோரும், குருணாகல் மற்றும் காலியில் முறையே 68.3 மற்றும் 68.19 வீதமானோரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை 4500 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு பெறுபேறுகளில்  3900 பேர் மட்டுமே 9 ஏ சித்திகளை பெற்றிருந்தனர்.

இதேபோல் பரீட்சையில் தோல்வியடைந்தோரின் வீதமும் 2011 ஆம் ஆண்டில் 4.7 இலிருந்து 4.1 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :