சவுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியாவில் 90 லட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளனர்.
மேலும் காலாவதியான விசாக்களுடன் தங்கியிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினரை சவுதி அரசு சமீபத்தில் வெளியேற்றியது.
உரிய ஆவணங்கள்யின்றி அந்நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டவர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய அரசு அந்நாட்டு அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
இதனால் உரிய விசா இல்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வசதியாக மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி அந்நாட்டு மன்னர் அப்துல் அஜிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று மாதம் கழித்தும் உரிய ஆவணங்களை பெறாத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

0 comments :
Post a Comment