சவூதி அரேபியாவின் தமாம் நகரில் அமைந்துள்ள நைன்டி வன் தடுப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.25 வயதுடைய அழகக்கோன் புதியன்சலாகே ரஞ்சித் குமார என்ற நாத்தாண்டிய, பண்டாரநாயக்க புரயை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இற்றைக்கு மூன்றரை வருடங்களுக்கு முன்னர் தொலிழ் நிமித்தம் இவர் சவூதியின் ரியாத் நகருக்கு சென்றிருந்ததாக அறிய முடிகிறது. இந்நிலையில் சவூதி அரேபிய குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறியோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாமில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
.
0 comments :
Post a Comment