(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை ஒரேஞ் டீ நிறுவனம் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த
வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள
அதன் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
ஒரேஞ் டீ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், மனித உரிமை
ஆணைக்குழுவின் அம்பாரை மாவட்ட பணிப்பாளருமான கலாநிதி ஏ.எல்.ஏ. நாஸரின்
நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ்விரத்ததான நிகழ்வில் நிறுவனத்தின்
ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இரத்ததானம் வழங்கினர்.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம
நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் எம்.என்.எம். அஸீம், கல்முனை சுபத்திரா
ராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை ஸாஹிறா
தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஆதம்பாவா, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை
அதிபர் வீ. பிரபாகரன் மற்றும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த
வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி, தாதியர்கள் பெருமளவிலான பொதுமக்களும்
கலந்து கொண்டனர்.
கல்முனை ஒரேஞ் டீ நிறுவனத்தினரால் இந்நிகழ்வில்
கலந்துகொண்டவர்களுக்கும், இரத்ததானம் வழங்கியவர்களுக்கும்
பரிசுப்பொதிகளும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment