கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கு நாளை வியாழன் இரவிரவாக பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெ
இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது.
மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம்.
இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.eelam boy
0 comments :
Post a Comment