(பி. முஹாஜிரீன்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழி பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது இஸ்லாமிய ஆய்வு மாநாடு இன்று செவ்வாய்கிழமை (9) ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி ஏ.பி.எம்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கே.எம்.எம். பழில்ஹக், அறபு மொழி பீடத்தின் தலைவரும் ஆய்வு மாநாட்டின் தவிசாளருமான சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ.முனாஸ் ஆகியோர் உரையாற்றியதுடன் விரிவுரையாளர்களும், இறுதிவருட மாணவர்களும் கலந்கொண்டு ஆய்வுகளை முன் வைத்தனர்.
0 comments :
Post a Comment