அமைச்சரவையை உடன் கூட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸ் கூறியது கபட நாடகமாகும்- ஹஸன் அலி

செம்மண் பர்ஹான்

மைச்சரவையை உடன் கூட்டுமாறு அரசிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தது கபட நாடகமாகும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின்  புனித தலமான பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாகத்   தாக்கப்பட்டபோது வாய்மூடி மௌனியாக இருந்த ஹக்கீம்  ஆடைக்களஞ்சியம் தாக்கப்பட்டபோது திடீரென விழித்தெழுந்து  ஓலமிடுவது நாடகமில்லையா?  என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி  மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களின்  அராஜகங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

பள்ளிவாசல்களில் ஆரம்பித்த அராஜகம்  ஹலால், உணவு,  உடை வியாபார ஸ்தலம் என்று தொடர்கின்றது.

இதனை இந்த அரசில் எதுவும் செய்யமுடியாது என்பது மு.கா. தலைவர் ஹக்கீம்  உட்பட அரசுக்கு வால்பிடிக்கும் அனைவருக்கும்  தெரிந்த விடயம். ஆனால், இவர்கள் பதவி, சுகபோகங்களுக்காக முஸ்லிகளுக்கு துரோகங்களைச் செய்துகொண்டு அரசின் பின்னால்  நிற்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் இன்று அரசியல்  தலைமை இல்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையான அரசியல் அநாதை என்ற நிலைமை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வால்பிடிக்கும் நேரத்தில்தான முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, முஸ்லிம் புத்திஜீவிகளும்  உலமாக்களும் இது தொடர்பாக
கரிசனை கொள்ள வேண்டிய காலம், தேவை தோன்றியுள்ளது.

இன்னமும் தாமதித்தால்  எமது  எதிர்கால முஸ்லிம் சந்ததிக்கு இந்த  நாட்டில்  இடமே இல்லாமல்போய்விடும்" - என்று சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :