யாங்கல்மோதர எனுமிடத்தில் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருணாக்கல் மேல் நீதிமன்றமே இவ்விருவருக்கும் மரணத்தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பாதுகாப்பான ரயில் கடவையின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி பஸ்ஸை செலுத்தியமையால் இந்த விபத்து ஏற்பட்டது.
இதனால் 41 பயணிகள் பலியானமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் காயங்களுடன் உயிர்பிழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.TM
0 comments :
Post a Comment