அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் சிலவற்றில் நீர்வழங்கல் தடை.


(எம்.பைஷல் இஸ்மாயில்)
ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் சிலவற்றில் கடந்த இரு தினங்களாக
நீர்வழங்கல் தடைப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகளில் நீர்விநியோகம் சீரற்ற வித்தில் காணப்படகின்றது. இதனால் மக்கள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நிந்தவூர் மற்றும் அதனையண்டிய கிராமங்களுக்கான நீர்வழங்கல் கடந்த சனிக்கிழமை முதல் தடைப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு நீர்வழங்கும் பிரதான தாங்கியின் வால்வு ஒன்று உடைந்ததையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றும் பொறியியல் உதவியாளர்கள் தற்போது அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீர் விநியோக வலையமைப்பில் விடுமுறை தினங்கள் மற்றும் இரவு நேரங்களில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நிந்தவூர் பிரதேசங்களுக்கான நீர் வழங்கல் இன்று மாலை வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை போன்ற பகுதிகளில் குறைவான அழுத்தத்துடனேயே நீரைப் பெற்றுக் கொள்ள முடிவதாகவும் குடிநீர் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :