கொழும்பிலுள்ள தூதரக விசாரணை அதிகாரிகளினால் இது தொடர்பான தரவுகள் அனைத்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்வடிப்படைவாத குழுக்களுக்கு இரண்டு வெளிநாடுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குறித்த குழுக்களை அமெரிக்கா இனங்கண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாம், தெளஹீத் ஜமாஅத், தாப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே முஸ்லிம் ஆகிய நான்கு வகையான இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில், இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டாட் இதனை அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
சில இலங்கை முஸ்லிம்கள் வெளிநாடுகளில் ஜிஹாத் யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஏனைய அநேகமானவர்கள் சவூதி அரேபியாவில் கடயைமாற்றுவதற்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக முஸ்லிம்கள் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு அமைப்பான இஸ்லாமிய ஐக்கிய அமைப்பு உறுப்பினர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவினர் பிளவடைந்து சென்ற போது கைவிடப்பட்ட ஆயுதங்களை இவர்கள் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஆயத பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழு உறுப்பினரான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் புலிகளுக்கு எதிராக மூன்ற முஸ்லிம் குழுக்கள் உருவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பாதாள உலகக் குழுவினருக்கும், முஸ்லிம் ஆயுததாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் திரட்டப்பட்ட அனைத்து தகவல்களும் உறுதிப்படுத்தப்படவை அல்ல என தூதரக அதிகாரிகள் தமது குறிப்பில் தெரிவித்துள்ளனர் என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.VV
0 comments :
Post a Comment