சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பதனால் ஜடேஜாவை படைத்தார் கடவுள் .டோனி

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயதாகிவிட்டது என்று உணர்ந்த கடவுள் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார் என்று தனது ரசிகர்கள் டுவீட் செய்ததை கிரிக்கெட் வீரர் டோனி ரீடுவீட் செய்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'சர்' பட்டம் கொடுத்துள்ளனர்.

மேலும் அவரைப் பற்றி பல ஜோக்குகள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் உலா வருகின்றது. இந்நிலையில் சென்னை அணியின் அணித்தலைவர் டோனி தனது ரசிகர்கள் டுவிட்டரில் ஜடேஜாவை பற்றி தெரிவித்துள்ளதை ரீடுவீட் செய்துள்ளார்.

சில டிவிட்டுகள்:
டிவிட்டரே ஜடேஜாவை ஃபாலோ செய்கிறது.
ரஜினி சாருக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்த கடவுள் சர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார்.

பயிற்சிக்காக மதியம் 3 மணிக்கு கிளம்பினால் சர் ஜடேஜா பயிற்சி பெற மைதானமே அவரைத் தேடி வருகிறது.
சர் ஜடேஜா பந்தை பிடிக்க செல்லத் தேவையில்லை பந்தே அவரது கையில் வந்து சேரும்.
சர் ஜடேஜா ஜீப் ஓட்டினால் அது ஓடாது ரோடு ஓடும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :