(கல்முனை செய்தியாளர்)
கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் கடந்த 2013.03.27ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் உமர் அலி எழுப்பிய கேள்விகளும் முதல்வரின் பதில்களும்.
சுற்றறிக்கை பிரகாரமே பணத்தை எடுத்தேன் இருந்தும் நான் எடுத்த பணத்தை மீள செலுத்தி விட்டேன் என கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். தொடர்ந்து...
கல்முனை மாநகர சபை உறுப்பினர் உமர் அலி உரையாற்றுகையில்..
அண்மையில் உத்தியோக நிமிர்த்தம் வெளிநாடு சென்றிருந்தீர்கள் இதற்கான அனுமதியினையும், விடுமுறையினையும் பெற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
இந்த வெளிநாட்டுப் பயனத்துக்கான செலவினங்கள் அனைத்தினையும் தங்களை அளைத்துசென்ற நிறுவனமே செய்திருந்தது. கல்முனை மாநகர சபை தவிர்ந்த பிற மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை தலைவர்களும் உங்களுடன் வந்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எவருமே தமது சபை நிதியிலிருந்து எவ்விதமான பயணச்செலவினையும் பெறவில்லை.
கல்முனை முதல்வராகிய நீங்கள் மாத்திரம் ஏன் சபை நிதியிலிருந்து வெளிநாட்டு பயணச்செலவினை எடுத்தீர்கள்? என தங்களை கேட்டுகொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு சபை நிதியிலிருந்து தங்களால் எடுக்கப்பட்ட விபரத்தினை சபையிடம் ஏன் மறைத்தீர்கள்? எனவும் கேட்க விரும்புகின்றேன்.
இது தொடர்பில் முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,
நான் வெளிநாட்டு பயணம் செல்லும்போது ஆளுனருடைய அனுமதியினைப் பெற்றுதான் சென்றேன். முதல்வரின் வெளிநாட்டுப் பயணக்கொடுப்பனவுக்காக ஆளுனரினால் வழங்கப்பட்ட அதற்கான சுற்றரிக்கை பிரகரமே அந்தப்பணத்தினை எடுத்தேன்.
சுற்றரிக்கை பிரகாரம் பணத்தினை பெறுவதால் சபைக்கு சமர்ப்பிக்க தேவையில்லை. இருந்தும் நான் எடுத்த பணத்தை மீள செலுத்தி விட்டேன் என கூறினார்.
0 comments :
Post a Comment