சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வு.


ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று 21-04-2013 அழகாக நடந்து முடிந்தது. 

போலீசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம் வரும் என்று காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர்.

 நீதி மன்ற உத்தரவுடன் வாருங்கள் நிறுத்துகிறோம் என்று நாம் கூறினோம். பின்னர் எமது நகர சபை சார்மன் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினை வராமல் இருக்க நான் பொறுப்பு என்றும் SLTJயினர் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். 

அவர்கள் பிரச்சினைக்கு உரியோர் அல்லர் என்றும் எம்மைப் பற்றி போலீசாருக்கு நற்சான்று அளித்த பின்னர் நிறுத்தக் கோரிய போலீசாரே எமக்கு பாதுகாப்புத் தரும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் மாற்றினான். அல்ஹம்துலில்லாஹ்.

 மிகச் சுவாரசியமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்று மதத்தவர்கள் கிட்டத்தட்ட 30 பேரும் எமது ஜமாஅத் அல்லாத 250 பேர்களும் நம் ஜமாஅத் உறுப்பினர்கள் 100 பேர்களும் அண்ணளவாக கலந்து கொண்டனர்.

ஈமானிய உள்ளங்களே இது உங்கள் சிந்தனைக்கு

இன முரண்பாடுகள் களைந்து, மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர் காலங்களில் நாடு முழுவதும் விரிவு படுத்த வேண்டிய தேவை உள்ளது. இஸ்லாம் குறித்து பிற மதத்தவர்கள் அகங்களில் படிந்துள்ள தப்பபிப்ராயங்களை களைந்தால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள இனவாதத் தீயை ஓரளவுக்கேனும் தணிக்க இயலமாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற மத அன்பர்கள் தொடுத்த வினாக்கள் அவர்கள் எவ்வளவு தூரம் இஸ்லாத்தை குறித்து தப்பாக புரிந்துள்ளனர் என்பதை எடுத்துச் சொல்வதோடு, இஸ்லாமியர்கள் இந்த தீனின் செய்தியை எவ்வளவு நீண்ட காலமாய் பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர் என்பதையும் துளாம்பரப்படுத்தி நிற்கின்றது.

“உங்கள் மார்க்கத்தை கற்பதற்கு சிங்கள மொழியில் ஒரு குர்ஆன் மொழி பெயர்ப்பை எமக்கு தர மாட்டீர்களா?“ என்று ஆதங்கப்பட்டு ஒரு சகோதரர் தொடுத்த வினா எம் உள்ளத்தை தைத்தது மட்டுமல்ல எம் உம்மத்தின் இழி நிலையை நினைத்து விழிகளில் கண்ணீர் துளிகளைக் கூட அரும்பச் செய்தது.

எனவே, காலத்தின் அவசியத் தேவையான இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர் காலத்தில் நாடு புராகவும் பரவலாக்க வேண்டுமாயின் பல முன்னாயத்தங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக சிங்கள மொழியிலான தர்ஜமா வெளியீடு, சிங்கள மொழியிலான நூற்கள் வெளியீடு, இஸ்லாத்தை தெளிவு படுத்தும் கையேட்டுப்பிரதிகள் வெளியீடு மற்றும் பிற ஏற்பாடுகள்.

இதில் தர்ஜமா வெளியீடு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜூன் மாத அளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மொழி பெயர்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இவை அனைத்துக்கும் பாரிய நிதி அவசியப்படுகிறது.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள், இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி இன முரண்பாட்டை களைய விரும்பும் பரோபகாரிகள் அனைவரும் உங்களால் இயன்ற நிதி மற்றும்  இந்நிகழ்ச்சிக்கு துணை புரியும் பொருள் உதவிகளை அவசரமாயும் அவசியமாயும் செய்து தூய இஸ்லாத்தின் உயர்வுக்கு உங்கள் பங்களிப்பினை நல்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வினயமாய் வேண்டிக்  கொள்கிறது.

தொடர்புகளுக்கு

Sri Lanka Thawheed Jama'ath (SLTJ)
241/A, Sri Saddharma Mawatha Maligawatta
Colombo-10.
HotLine: +94-112-677-974

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
தலைவர் (President)
R.M. Riyal +94-774-781-471/+94-777-255-467
செயலாளர் (Secretary)
Abdur Razik +94-774-781-473/+94-771-524-524
பொருளாளர் (Treasurer)
A.R.M. Rilwan +94-774-781-483/+94-773-951-616

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :