(எம்.பைஷல் இஸ்மாயில்)
நகரங்களுக்கு இடையிலான கடுகதி மற்றும் தபால் ரயில் சேவைக் கட்டணங்கள் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்று 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நான்கு பிரிவுகளின் அடிப்படையில் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று புகையிரதச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், மூன்றாம்தர வகுப்புக்கான கட்டணங்கள் 150.00 ரூபாவிலிருந்து 180.00 ரூபாவாகவும், 220.00 ரூபாவிலிருந்து 280.00 ரூபாவாகவும், 270.00 ரூபாவிலிருந்து 320.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாந்தர வகுப்புக்கான ஒதுக்கப்பட்ட ஆசனக் கட்டணங்கள் 220.00 ரூபாவிலிருந்து 280.00 ரூபாவாகவும் 380.00 ரூபாவிலிருந்து 450.00 ரூபாவாகவும் 450.00 ரூபாவிலிருந்து 500.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் முதற்தர வகுப்புக்கான கட்டணம் 750.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர் பிரிவுக்கான கட்டணம் 880.00 ரூபாவிலிருந்து 1,000.00 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ள இதேவேளை உறங்கும் பிரிவுக்கான கட்டணம் 1,250.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. என்று புகையிரத சேவைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment