(எம்.பைஷல் இஸ்மாயில்)
நாவிதன்வெளி சவளக்கடை பஸார் அர்-றஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் சுமார் 50 வருடம் பழமை வாய்ந்ததாக காணப்பட்டு வந்ததை மாற்றியமைக்க ஜமாஆத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் வழிகாட்டலில் குவைத் நாட்டின் 40 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று (2013.04.19) பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எஸ்.எச்.அன்வர், கல்முனை அல்ஹாமீயா கலாபீடத்தின் பிரதி அதிபர் ஏ.சீ.தஸ்தீக் (மதனி), சவளக்கடை மத்தியமுகாம் உலமா சபைத் தலைவர் வீ.எம்.அஸ்வர் ஹாமீ, நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம், பள்ளிவாசல் நிருவாகத்தினர் உட்பட பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment