பண்டிகை காலத்தில் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் அதிக பணம் அறவிடும் தனியார் பஸ்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் குறித்த பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தனியார் பஸ்களில் செல்லும் பயணிகளின் வசதிகள் குறித்து தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் ரொஷான் குணவர்த்தன நேற்று புறக்கோட்டை பஸ் நிலையத்திற்குச் சென்று ஆராய்ந்தார்.
இதேவேளை, புத்தாண்டுக்கு ஊர்களுக்குச். செல்லும் பயணிகளின் தேவை கருதி அவசியம் ஏற்பட்டால் மேலும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தயார் என ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். AD
0 comments :
Post a Comment