(அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி-)
'பர்தா தான் தமது அடுத்த இலக்கு' என பொது பல சேனா அறிவித்து இருப்பதாக பரவலாக இணையதளங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அது தவறான செய்தியென அவ்வமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் டாக்டர்.டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் :
பர்தா என்பது முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் ஒன்று.
இந்நாட்டில் முஸ்லிம்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒருபோதும் நாம் அவர்களின் உரிமைகளில் கைவைக்கப் போவதில்லை. ஆனால் சில பெண்கள் இரண்டு கண்களை மாத்திரம் திறந்து செல்வது பற்றியே நாம் கருத்துத் தெரிவித்து இருக்கிறோம்.
மேலும் நாம் நேற்று உலமா சபையையும் சந்தித்து சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஹலால் விவகாரம் பற்றியும் எம்மைத் தப்பாகவே பலர் சித்தரிக்கின்றனர். ஹலால் முஸ்லிம்களுக்குரிய ஒரு உரிமை. அதனை முஸ்லிம்கள் கடைபிடிக்கக் கூடாது எனவும் நாம் கூறவில்லை.
சில சிங்கள மற்றும் முஸ்லிம் வாலிபர்கள் பலர் எம்மைப் பற்றிய பல பொய்யான செய்திகளையும், குற்றச் சாட்டுக்களையும்; இணையதளம், எஸ்.எம்.எஸ் கள் மூலம் பரப்பி வருகின்றனர். இதுபற்றி நாம் இரகசியப் பொலிசுக்கும் அறிவித்திருக்கிறோம் எனவும் கூறினார்
0 comments :
Post a Comment