கண்டியில் நாங்கள் பல்லாயிரம் ஆண்டு காலம் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எம் மத்தியில். எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. சில கசப்பான நிகழ்வுகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுபல சேனாவும் ஜம்மியதுல் உலமாவும் தற்போது கைகோர்த்து ஒன்று சேர்ந்துள்ளது.
இதன் பின் எங்களை பற்றி பேசுவதில்லை என்று பொதுபல சேனாவினர் தெரிவித்துள்ளதுடன் நாமும் அவ்வாறே நடக்க ஒத்துக் கொண்டுள்ளோம் என்றும் கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கண்டி பொலீஸாரின் ஏற்பாட்டில் இன்று 2013.04.07 மாலை கண்டி பெரிய பள்ளிவாயளில் பௌத்த தேரர்கள் மற்றும் மௌலவிமார்கள் உற்பட பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே மௌலவி பஸ்லுல் றஹ்மான் இவ்வாறு கூறினார்.
0 comments :
Post a Comment