நாட்டில் தற்போது இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் அடிப்படைவாதிகளுக்கு கோட்டை பிரதேசத்துக்குள் தான் இருக்கும் வரை செயற்பட அனுமதிக்கப்போவதில்லை என கோட்டை நகர பிதா ஜனக ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சந்திப்பொன்றின் போதே நகர பிதா ஜனக ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் பல வருடங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்பவர்கள். அந்த யுத்தமானது தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. அது அடிப்படைவாத அரசியல்வாதிகளினால் உருவான யுத்தமாகும்.
மாகாணசபை தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தல்கள் எம்மை எதிர்நோக்குவதால் அந்த தேர்தலுக்காக தமது கட்சியை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை சில அடிப்படைவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இனவாதத்தை தூண்டி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் எம்மை இக்கட்டுக்குள் தள்ளும்.
இவ்வாறான நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒருபோதும் பங்கு கொள்ள கூடாது. இனவாதத்துக்கு எந்நேரத்திலும் நாம் விரோதமானவர்களாக இருக்க வேண்டும்.
பெளத்த சமயத்துக்கு நாங்கள் எந்நேரமும் ஆதரவானவர்களே. புத்தர் ஏனைய மதங்களை மதிக்குமாறு உபதேசித்திருக்கிறார். அதனையே நாம் பின்பற்றவேண்டும். அதனை பின்பற்ற தவறின் நாம் பாரிய பின்னடைவினை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.VV
0 comments :
Post a Comment