மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரையாற்றுகையில், பொதுபலசேனா தற்போது தோல்வி பெற தொடங்கியுள்ள நிலையில் வடக்கிலே முஸ்லிம் அமைச்சர்கள் காணி சுவீகரிக்கின்றார்கள் என்ற விசமத்தனமான பொய்யான கருத்தை பிரச்சாரம் செய்து வருகின்றனர.
நாட்டில் இன்று யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் புதிய இலங்கையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்புதிய முயற்சியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினைவாத, மதவாத சிந்தனைகளை தூக்கியெறிந்து ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.
பொதுபலசேனா எனும் இந்த அமைப்பு இன்று தோல்வியை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கிலே காணிகளை சுவீகரிக்கின்றனர் என்ற ஒரு பொய்யான கருத்தை கூறியுள்ளது. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தவும் பொதுபலசேனா முயற்சிக்கின்றது.
அரசியல்வாதிகள் மதத்தில் தலையீடு செய்வதும் மதவாதிகள் அரசியலில் ஈடுபடுவதும் சிறந்த நடவடிக்கையல்ல. அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு அநீதி இடம்பெறுவதாக அண்மையில் மட்டக்களப்பில் ரணில் கூறியுள்ளார்.
சிங்கள பகுதிக்கு சென்று மாறிக் கூறுவார் இந்த உளுத்துப்போன கதையை விட்டுவிட்டு புதிய இலங்கையை உருவாக்க எடுக்கும் முயற்சிக்கு ரணில் விக்ரமசிங்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்நாட்டில் தமது மதங்களை, கலாசாரத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இதில் எந்த பொதுபலசேனாவும் கை வைக்க முடியாது.
பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் மீது அன்பை காட்ட வேண்டும். இந்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அமைதியையும் சமாதானத்தையும் குழப்புவதற்கு இந்த பொதுபலசேனா போன்ற இனவாத சக்திகள் முயற்சிக்கின்றன.
யுத்தத்தினாலும் அடக்குமுறைகளினாலும் பெண்களும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகளுக்குப் பின்பு தமது உற்பத்திப் பொருட்களை பெண்கள் இங்கு காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
பெண்கள் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்க வேண்டும். இங்குள்ள நமது உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கு எமது அமைச்சு உதவ தயாராக உள்ளது என்றார்.VV
0 comments :
Post a Comment