மதி கெட்ட சோனகனே என்னும்தலைப்பில் துண்டுப்பிரசுரம்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

தி திராவிட சேனன் என்ற பெயரில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரம் ஒன்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தபால் மூலம் தமிழ் வர்த்தகர்களுக்கு கிடைக்கப்பெற்ற துண்டுப்பிரசுரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்வரும் 04 ஆம் திகதி வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு வேண்டி ஆதி திராவிட சேனன் படையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விழித்தெழுவீர் தமிழ் சிங்கள மக்களே!

சுனை கெட்ட சோனகரின் மதிகெட்ட செயலை எச்சரிக்கின்றோம்!!! என்ற தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதி கெட்ட சோனகனே சிந்திக்கா விட்டால் மாணவ சமூகத்தில் பிரிவினைகள் ஏற்படும்   என்பதை எச்சரிக்கின்றோம்.

·ஹலால் (அறாம்) ஹராம் இதன் எதிரொலி சகல உணவு வகையிலும் வந்தால் பாடசாலை சிறுவர்கள் உணவு பரிமாற்றம் செய்யும் போது (அறாம்) ஹராம், ஹலால் வரும் அவ்வேளை அறியா பருவத்தில் இருக்கும் சிறு பிஞ்சு உள்ளம் படைத்த பாலர்கள் மனதில் உனது வைராக்கியம் பதியும் என்பதை எச்சரிக்கின்றோம்.

 உனது சமூகத்தின் உணவுக்காக மிருக கழுத்தை அறுக்கும் நீ உழைப்புக்காக மனிதனின் கழுத்தை அறுக்காதே என எச்சரிக்கின்றோம்.

 கிழக்கில் சோனக சமூகம் செய்த தமிழ் இன படுகொலையை இராணுவம் மீது சாட்டினாய். இனி இந்த சொறி வேட்டை பலிக்காது சீண்டினால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் தடுக்க முடியாது. உமது சமூகத்தின் இறைவன் அல்லாஹ்வே உன்னை தண்டிப்பார் என எச்சரிக்கின்றோம்.

 கிழக்கில் இன உறவை உணவு, உடை ரீதியாக பிளவுகள் ஏற்படுத்துவதற்காக 25-03-2013 அன்று கடையடைப்பு செய்து தமிழ் சமூகத்தை விரோதியாக காட்டியதற்கும் தமிழ் சமூகம் சோனகர்களின் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யாவிடின் சோனகர்களால் சம்பாதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கும் முகமாகவும் எச்சரிக்கும் முகமாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள் அனைத்தையும் 04-04-2012 ஆம் திகதி அன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு அறை கூவலிடுகின்றோம்.

 தன்மானமுள்ள அனைத்து தமிழனும் இதில் பங்காளி ஆக வேண்டும். ஆதி திராவிட சேனன் படை என்று அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :