(எம்.பைஷல் இஸ்மாயில்)
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டின் கீழ் கடந்த சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (2013.04.09) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கலந்தர் இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணகி புரம், திருக்கோவில், ஆலங்குளம், அட்டாளைச்சேனை, திராய்க்கேணி, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள குடும்பங்களில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தரம் ஒன்று தொடர்க்கம் தரம் ஐந்து வரையில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிய பின்னர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளரும் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களை வாழ்த்தி அம்மாணவர்கள் கல்வி கற்கும் விடயங்களில் அதிக ஆர்வங்களை செலுத்தும் வகையில் தங்களின் உரையினை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் லவீனா ஹசன்தி, மாவட்ட இணைப்பாளர்களான பிரியங்கா கொஸ்தா, செயினூலாப்தீன் மௌலவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment